ஸ்ரீகாளஹஸ்தி திருகோயிலில் ஜெயலலிதா சுவாமி தரிசனம்


ஸ்ரீகாளஹஸ்தி திருகோயிலில் ஜெயலலிதா சுவாமி தரிசனம்

ஆந்திர மாநிலம்,​​ சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி திருக்கோயிலில் அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.​ ​

​இதற்காக சென்னையிலிருந்து திங்கள்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் தோழி சசிகலாவுடன் ஜெயலலிதா காளஹஸ்தி சென்றார்.​ ​

​அங்குள்ள கோயிலில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்,​​ ஸ்ரீ ஞானபூங்கோதை அம்மையார்,​​ ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சன்னதிகளுக்குச் சென்று ஜெயலலிதா சிறப்பு வழிபாடு செய்தார்.​ ​

​பூஜை முடிந்த பின்,​​ அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு,​​ மதியம் சென்னை திரும்பினார்.​

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)