ஹர்பஜன், யுவராஜுக்கு காயம்: டெஸ்ட் தொடரில் இருந்து விலகல்


ஹர்பஜன், யுவராஜுக்கு காயம்: டெஸ்ட் தொடரில் இருந்து விலகல்

image இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்குக்கு அடி வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் விளையாடமாட்டார்.
 அவருக்குப் பதிலாக லெக் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா களமிறங்குகிறார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 287 ரன்களை வாரி வழங்கிய ஹர்பஜன், 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இதனால் விமர்சனத்துக்கு உள்ளானார்.
 இந்த நிலையில் அடி வயிற்றில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், \\\"என்னால் அடுத்த போட்டியில் விளையாட முடியாது. நான் முழுமையாகக் குணமடைய சில நாள்கள் ஆகலாம்\\\' என்றார்.
 இந்தப் போட்டியில் பங்கேற்காததன் மூலம் அவர் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்த ஆண்டின் இறுதி வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை அவர் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது போட்டியின் போது அவர் 100 போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார்.
 யுவராஜ் விலகல்: இதேபோல் யுவராஜ் சிங் இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்தபோது, டிம் பிரெஸ்னன் வீசிய பந்து அவரது இடது கை ஆள்காட்டி விரலை பதம்பார்த்தது. அதனால் காயமடைந்துள்ளார். இதையடுத்து அவரும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
 தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் ஜாகீர்கான், 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா, மாட்டாரா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)