20-20 உலகக் கோப்பை ஏப்ரல் 30-ம் தேதி தொடக்கம்


20-20 உலகக் கோப்பை ஏப்ரல் 30-ம் தேதி தொடக்கம்

மேற்கிந்தியத்தீவுகளில் வரும் 30-ம் தேதி 20-20 உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது. இதில் இந்தியா உள்பட 12 நாடுகள் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக கேப்டன் தோனி தலைமையில் இந்திய அணியினர், செவ்வாய்க்கிழமை மேற்கிந்தியத்தீவுக்குப் புறப்பட்டனர்.

டோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடுவதை விட நாட்டுக்காக அணியில் சேர்ந்து விளையாடுவது மிகவும் முக்கியமானது. நமது அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுமே நல்ல பார்மில் உள்ளனர்.

அனைவரும் முழுத்திறமையை வெளிப்படுத்துவது அவசியம். இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்பதில் எவ்வித சந்தேகமும் தேவையில்லை. அணியில் சேவாக் இடம் பெறாதது பெரிய இழப்பு என்றார் அவருக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யுவராஜ் சிங் இந்த போட்டியில் முக்கிய வீரர். 20 ஓவர் போட்டிகளில் அவர் எப்போதுமே சிறப்பாக விளையாடக் கூடியவர். ஐபிஎல்-லி 2010ல் அவர் அதிக ரன்களைக் குவிக்கவில்லை என்றாலும், அது இந்தப் போட்டியை எவ்விதத்திலும் பாதிக்காது என்றார்.

இந்திய அணி விவரம்: தோனி (கேப்டன்), கெளதம் கம்பீர் (துணை கேப்டன்), முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், யூசுப் பதான், தினேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா, ஜாகீர் கான், பிரவீண் குமார்,ஆஷிஸ் நெஹ்ரா, வினய் குமார்.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)