3-வது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை நிதான ஆட்டம்


3-வது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை நிதான ஆட்டம்

கொழும்பில் செவ்வாயன்று தொடங்கிய இந்தியாவிற்கு எதிரான 3-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 293 ரன் குவித்துள்ளது.

டாஸில் வென்று முதலில் பேட் செய்து வரும் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பரணவிதானா 8 ரன்னுக்கும், தில்ஷான் 41 ரன்னுக்கும் ஆட்டமிழக்க கேப்டன் சங்கக்காரா சிறப்பாக ஆடி 75 ரன் குவித்தார்.

பிரக்யான் ஓஷா பந்தில் சேவாக்கிடம் கேட்ச் கொடுத்து சங்கக்காரா வெளியேறினார்.

இதையடுத்து ஜெயவர்த்தனே, சமரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெயவர்த்தனே ஓஜா பந்தில் எல்.பி. டபிள்யூ ஆன போது அவர் 56 ரன் சேர்த்திருந்தார். சமரவீரா 65 ரன்னுடனும், மாத்யூஸ் 26 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி, இந்தப் போட்டியில் வென்று தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஆடி வருகிறது. இந்திய அணியோ இந்தப் போட்டியில் வென்றால், தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் ஆடி வருகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை.

   
Name:
Email Id:
Comments:
Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)